Take a fresh look at your lifestyle.

திருவண்ணாமலை மண் சரிவில் மூன்று பேர் சடலமாக மீட்பு

53

கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பினால் மலையடிவார வீடுகளின் மீது பாறைகள் உருண்டோடி விழுந்தன. அந்த திடீர் நிகழ்வால் அங்கிருந்த வீடுகளில் வசித்து வந்த ஏழு பேர் மண் சரிவில் சிக்கி இருந்ததாக கூறப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு பணிக்குழு மரங்களை இயந்திரத்தின் மூலம் வெட்டியும், வீடுகளில் மேற்கூரைகளை அகற்றும் தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த இடிபாடுகளை நீக்கிப் பார்த்ததில் மூன்று பேரின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களின் உதவி கொண்டு மீட்கப்பட்ட உயிரற்ற உடல்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்தன.சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் இருந்தனர்.

மீட்புப் பணியினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வேளையில் மழை குறிக்கிட்ட போதிலும் 12 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.