Take a fresh look at your lifestyle.

இயக்குனரும்,எழுத்தாளருமான ஜெயபாரதி இறைவனடி சேர்ந்தார்

49

எழுத்தாளர் இயக்குனர், தேசீய விருது பெற்ற ஜெயபாரதி (குடிசை)வயது 77 நுரையீரல் தொற்று காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிற்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு இறந்து விட்டார்.

தமிழில் மாற்று சினிமாவை உருவாக்குவதில் உறுதியாக இருந்து வந்த இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதி (77), நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1979ல் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான ‘குடிசை’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜெயபாரதி.

கடைசியாக 2010-ஆம் ஆண்டு ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் சிறப்பு விருது (ஒய்.ஜி.மகேந்திரன்), சிறந்த நடிகை சிறப்பு விருது (சங்கீதா கிரிஷ்) என, தமிழக அரசின் 3 விருதுகள் கிடைத்தது. பிறகு ஜெயபாரதி படம் இயக்கவில்லை. அவர் மிகவும் வறுமையில் வாடுவதாக தகவல் வெளியானது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.