இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை. 9892035187
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்கக் கழகம் [ IPL CHESS ACADEMY ] மும்பை நகர் மாவட்ட சதுரங்க இயக்கத்துடன் இணைந்து மும்பையில் முதன்முதலாக நடத்திய சதுரங்கப் போட்டி 30.12.2023 அன்று பம்பாய் திருவள்ளுவர் மன்றம், வி.தேவதாசன் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐ.பி.எல் சதுரங்க கழக இயக்குனர் ச.கண்ணன் தலைமையில் தென்காசி மாவட்டத்தில் இருந்து 25 சதுரங்க வீரர்கள் மும்பைக்கு வந்திருந்தனர். அவர்கள் U17, U13, U10, U8 என நான்கு பிரிவுகளில் மும்பை சதுரங்க வீரர்களுடன் மோதினர். இந்நிகழ்வில் ஒட்டுமொத்தமாக 186 மாணவ / மாணவியர்கள் பங்கேற்றனர்.
ஐ.பி.எல் சதுரங்கக் கழக இயக்குனர் ச.கண்ணன் அவர்களின் பயிற்சியில் தென்காசியிலிருந்து மும்பை வந்து பங்கேற்ற 25 சதுரங்க வீரர்கள், மும்பை வீரர்களுடன் சிறப்பாக விளையாடி ஏராளம் பரிசுகளை வென்றனர்.
பரிசளிப்பு விழா நிகழ்வில் மும்பை வருமானவரித்துறை கூடுதல் ஆணையாளர் திருமிகு. சுரேஷ் பெரியசாமி அவர்கள் ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள், கேடயங்கள், நினைவுப் பரிசுகளை வழங்கி எழுச்சியுரையாற்றினார்.
நிகழ்வில் பேரவை உறவுகள் ம.செல்வராஜ், திருமதி. மாலதி பிரகாஷ் மற்றும் திருமதி. சுலபா கருண், திரு.ஆனந்த் சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஐபிஎல் சதுரங்கக் கழகத் தலைவர் மா.கருண், பொதுச்செயலாளர் ஜெ.ஜான் கென்னடி, நண்பர் கு.ரவி, இயக்குனர் ச.கண்ணன், துணை இயக்குனர் திருமதி. தமிழ்செல்வி கண்ணன், பேரவை ஆர்வலர்கள் திரு. ஈ.சுரேஷ் பிரபாகர், எல்.பொன்னம்மாள், மும்பை நகர் மாவட்ட சதுரங்க இயக்கத்தின் செயலாளர் திரு.ராஜா பாபு மற்றும் புதுக்கோட்டை மணிகண்டன், பாவூர்சத்திரம் மணிவண்ணன், ஆகியோர் நிகழ்வின் ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.