தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மக்களை பார்வையிட சென்றார். அங்கு அவரை தென்தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் ‘அண்ணே அண்ணே’ என்று குலவையிட்டு வரவேற்றனர் ஊர் மக்கள். விருதுநகர் மாவட்ட ஆய்வின்போது 2 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கலந்துரையாடினார் முதல்வர்.