Take a fresh look at your lifestyle.

பாலத்தில் இருந்து குதித்த சிவகார்த்திகேயன்..கூடிய மக்கள் கூட்டம்!

34

சென்னை தாம்பரத்தை அடுத்த சதானந்தபுரம் பகுதியில், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! மேம்பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் கீழே குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்றுகொண்டு ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது!

மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகிய அமரன் திரைப்படம் ரூ. 250 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் சினிமா வணிகம் மிகப்பெரியதாக உயர்ந்து வருகிறது. அவர் தனது சம்பளத்தை 25 கோடியில் இருந்து 55 கோடியாக உயர்த்தி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி வருகிறது.