Take a fresh look at your lifestyle.

‘அமரன்’ இயக்குனருடன் கைகோர்க்கிறார் தனுஷ்

40

தனுஷின் 55வது படத்தை ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சமீபத்தில் வெளியான அமரன் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மகத்தான வசூல் சாதனை படைத்து வருகிறது. அதைத் தொடர்ந்து கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடந்துள்ளது. அதில் அன்புச்செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச்செழியன் ஆகியோருடன் இணைந்து தனுஷ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இயக்குனர் வெற்றிமாறன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘ராயன்’ படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படம் வெளியாக உள்ளது. இதைத் தவிர தெலுங்கில் ‘குபேரா’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்திலும் தனுஷ் நடிக்கிறார். இதற்கிடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கின்றன; இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவரான தனுஷூடன் எனது அடுத்த படம் நிகழவிருக்கிறது. திறமையின் ஆற்றல் மையம், பன்முக திறமையாளர் என அவர் தனுஷை புகழ்ந்து அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.