Take a fresh look at your lifestyle.

அஜித் உதவினார் என்று ஆளாளுக்கு எழுதுறாங்க…அது உண்மை இல்லை கதறும் நடிகர் அப்புக்குட்டி!

324

என்னைப்பத்தி மீடியாக்கள் முழுமையா விசாரிக்காம செய்திகள் வெளியிடுறாங்க. குறிப்பா, அஜித் சார் எனக்கு வீடு வாங்கி கொடுத்தார்.

அவர், நடிக்கும் படங்களில் வாய்ப்பு வாங்கி தருகிறார். கஷ்டபடும் போது, பண உதவிகள் செய்கிறார். என்றெல்லாம் எழுதுறாங்க இது முற்றிலும் பொய். நான் இன்னும் வாடகை வீட்டில் தான் சென்னை அருகே கோவூரில் இருக்கிறேன். போன கொரோனா காலத்தில் மிகப் பெரிய கஷ்டபட்டேன். யாரும் உதவுல, அஜித் உதவினார் என்கிற பொய்யான செய்தியால யாரும் உதவ முன் வரல இதுதான் உண்மை. தயவு செய்து இனிமேல் உண்மையறிந்து எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் என்கிறார் அப்புகுட்டி.