சென்னையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவி செய்துள்ளார்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு அந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ என பெயரும் வைக்கப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் ‘ரெடி அலர்ட்’டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து தொடர்ந்து 3-4 நாட்களுக்கு கனமழை பெய்தது. மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட டி. பி. சத்திரத்தை சேர்ந்த 250 குடும்பங்களை தவெக கட்சியின் பனையூர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒரு மாத மாளிகை பொருட்கள் மற்றும் போர்வை உள்ளிட்ட பொருட்களை தவெக தலைவர் விஜய் நிவாரணமாக வழங்கினார். கட்சித் தொண்டர்களும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.