பால்குடம் எடுத்த துர்கா ஸ்டாலின் – கொட்டும் மழையிலும் தீவிரம்

திருவெண்காடு கோயிலில் கார்த்திகை மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம்(டிசம்பர் 1) கொட்டும் மழையில் ரெயின் கோட் அணிந்தபடி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்தார்.

துர்கா ஸ்டாலினுக்கு பொதுவாகவே கடவுள் பக்தி அதிகம். இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறார். அந்தந்த கோயிலில் நடைபெறும் திருவிழாக்களிலும் இவர் கலந்து கொள்வது வழக்கம். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நிறைய கோயில்களில் துர்கா பூஜை, புனஸ்காரங்களை செய்திருந்தார். அதன் பலனாகவே ஸ்டாலின் முதல்வரானார் என சொல்லப்பட்டது.

அந்த வகையில் மயிலாடுதுறையில் ஒரு கோயிலில் ரெயின்கோட் அணிந்து கொண்டு பால்குடம் ஏந்தி சென்றுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தி மற்றும் நவகிரகங்களில் புதன் பகவான் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். அப்படியிருக்கையில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்திருப்பது சமூக வலைதலத்தினரிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

Comments (0)
Add Comment