6 மாத சிறைதண்டனை பெற்ற ஹெச். ராஜா

தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் ஹெச்.ராஜா ஒரு குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு பிரப்பித்துள்ளது.

இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பெரியார் சிலைகளை உடைப்பேன் என்று பதிவித்திருந்தார். அதுமட்டுமின்றி திமுக அமைச்சர் கணிமொழிக்கு எதிராக சில தரக்குறைவான கருத்துகளை கூறியிருக்கிறார் என்று சொல்லி பல்வேறு காவல் நிலையங்களில்  இவர்மீது திமுக, காங்கிரஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட காட்சிகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார்கள் தொடர்பாக ஏழு வழக்குகள் ஹெச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்டன. ஈரோடு நகர் காவல்நிலையம், கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதுதொடர்பான விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க எம்.பி, எம். எல். கே-க்கள் மீதான குற்ற  வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றதிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்குக்களின் விசாரணை நீதிபதி ஜெயவேல் முன்பு நடைபெற்றபோது இந்த வழக்கிறக்கான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஹெச்.ராஜாவுக்கு  எதிராக காவல்துறை தரப்பில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018-இல் போடப்பட்ட பதிவுகள் இரண்டும் ஹெச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டது தான் என நீதிமன்றம் தீர்மாணித்துள்ளதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அவருக்கு ஆறு மாத சிறைதண்டனை விதிக்கப்படுகிறது என  நீதிமன்றத்தால் உத்தரவு  பிரபிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ஹெச்.ராஜா மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்குவதற்காக தீர்ப்பு நிறுத்தி வைக்கபடுமா என்ற தகவல்கள் அனைத்தும் அடுத்த கட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Comments (0)
Add Comment