‘விடாமுயற்சி டீசர்’ – எப்படி இருக்கு?

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் ஒரு வழியாக நவம்பர் 29-ஆம் தேதி இரவு 11:08 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அஜித்தின் விடாமுயற்சி படம் ஏகப்பட்ட தடைகளை தாண்டி உருவாகி வருகிறது.

விடாமுயற்சி படம் முதலில் வருமா? அல்லது குட் பேட் அக்லி படம் முதலில் வருமா? என்கிற அளவுக்கு போட்டிகள் வெடித்து வந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டீசர் குட் பேட் அக்லி படத்தை முந்திக்கொண்டது.

லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கடைசி வரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், சுரேஷ் சந்திரா தான் விடாமுயற்சி டீசர் அப்டேட்டை உறுதிப்படுத்தினார். சன் டிவி யூடியூப் சேனலில் அஜர்பைஜானில் அஜித் மிரட்டிய விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியான நிலையில், அதனை டிரெண்ட் செய்யும் முயற்சியிலும் இரவு முழுக்க உறங்காமல் அதிக வியூஸ் ரெக்கார்டு படைக்கும் முயற்சியிலும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் இறங்கியிருந்தனர்.

1997ம் ஆண்டு கர்ட் ரசல் நடிப்பில் வெளியான பிரேக்டவுன் ஹாலிவுட் படத்தை தழுவித்தான் இந்த விடாமுயற்சி படம் உருவாக்கப்பட்டு வருவதாக ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி இருந்தது.  அஜித், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா கேங் த்ரிஷாவை கடத்திச் செல்ல தனது மனைவியை மீட்க அஜித் செய்யும் விடாமுயற்சி தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என வலைதளவாசிகள்‌ பேசி வருகின்றனர்.

“எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என அட்டகாசமான வரிகளுடன் விடாமுயற்சி படத்தின் டீசர் ஹாலிவுட் பட தரத்துக்கு உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமாரின் இந்த படம் வரும் 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Comments (0)
Add Comment