‘Fengal’ புயல் – பெயரிட்டது வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தாழ்வு மண்டலமாக உருவாகி இருந்தது என்பதை நேற்றைய செய்தியாகக் கண்டோம். அந்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது‌ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நாகை மாவட்டத்திற்கு 590கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 800 கிமீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது உள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ‘Fengal’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘Fengal’ புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டை நோக்கி நகரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நான்கு மாவட்டங்களுக்கு மூன்று நாட்கள் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருப்பட்டூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Comments (0)
Add Comment