மேற்கு வங்கம் – மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி!

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமையான இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியான மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) 6 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சிட்டிங் எம்.எல்.ஏக்கள் இந்த இடங்களை காலி செய்ததை அடுத்து, நைஹாட்டி, ஹரோவா, மெதினிபூர், தல்தாங்ரா, சீதை (எஸ்சி), மற்றும் மதரிஹாட் (எஸ்டி) ஆகிய இடங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மாநிலத்தை கொதித்தெழ செய்த RG கர் கற்பழிப்பு-கொலை வழக்குக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த இடைத்தேர்தல், முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை மற்றும் TMC-யின் அரசியல் மேலாதிக்கத்திற்கான ஒரு லிட்மஸ் சோதனையாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பாக 5 தொகுதிகள் திரிணாமூல் காங்கிரஸ் வசமும், ஒரு தொகுதி பாஜக வசமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments (0)
Add Comment