2026 நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கூட்டணி வைக்கப் போவதில்லை என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டோம் என்றபடியால் அதில் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அழுத்தம் திருத்தமாக ஊடகத்தினரிடம் கூறியிருக்கிறார்.
புரசித்தலைவர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி, புரசித்தலைவி ஜெயலலிதா ஆட்சி அமைத்து வழிநடத்திக் கொண்டிருந்த காலத்திலும் சரி, அவர்களது மறைவுக்கு பின்னான காலத்திலும் சரி நிறைய திட்டங்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டை இந்தியாவில் ஒரு முதன்மை மாநிலமாக மாற்றி அமைத்த பெருமை அ.இ.அ.தி.மு.க கட்சியையே சேரும் என்று அவர் பெருமிதத்தோடு பேசினார்.