அ.தி.மு.க முன்னாள் MLA-வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அ.தி.மு.க முன்னாள் MLA கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் திமுக செய்தி தொடர்பாளராக இருந்த கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. திருப்பதியில் அவரது மூன்றாவது மகளின் திருமண விழாவில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

கோவை செல்வராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் கட்சியின் கொள்கைகள், கருத்துகளை விவாதங்களிலும் மேடைப் பேச்சுக்களிலும் ஆணித்தரமாக எடுத்துவைத்தவர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Comments (0)
Add Comment