அறிமுக இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எமகாதகன் திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது. இத்திரைப் படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ.ஹரி உத்ரா வெளியிடுகிறார்…
பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி கண்ணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார்…
ஒளிப்பதிவு LD, படத்தொகுப்பு ராம்நாத். இப்படத்தில் கார்த்திக்,மனோஜ் ,ராஷ்மிதா ஹிவாரி , சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஜீ மியூசிக் கைப்பற்றியுள்ளது.