இந்தியப் பேனாநண்பர் பேரவை சதுரங்க கழகம் IPL CHESS ACADEMY மும்பை, இந்தியப் பேனாநண்பர் பேரவையின் துணை அமைப்பாகும். இதன் சார்பாக முதன் முதலாக மும்பை மாநகரில் பிரமாண்டமான சதுரங்கப் போட்டி நடத்தப்படுகிறது. பம்பாய் திருவள்ளுவர் மன்றம், வி. தேவதாசன் கலையரங்கில் 30-12-2023ல் நான்கு பிரிவுகளாக (U17, U13, U10, U8) போட்டிகள் நடைபெற உள்ளது.
இச்சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டத்தில் இருந்து ஐ.பி.எல் சதுரங்க கழக இயக்குனர் ச.கண்ணன் தலைமையில் 25 சதுரங்க வீரர்கள் மும்பை வந்துள்ளனர். அவர்கள் நான்கு பிரிவுகளிலும் மும்பை சதுரங்க வீரர்களுடன் விளையாடுகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படவுள்ளன.
பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் திரு.சுரேஷ் பெரியசுவாமி IRS அவர்கள் மற்றும் பம்பாய் திருவள்ளுவர் மன்றம் பொதுச் செயலாளர் திரு.ஜேம்ஸ் தேவதாசன் ஆகியோர் கலந்து பரிசுகளை வழங்குகின்றனர். இந்த போட்டியை மும்பை மாவட்ட சதுரங்க கழகம் (Mumbai City District Chess Association) இணைந்து நடத்துகிறது.
போட்டி நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் தலைவர் மா.கருண், பொதுச்செயலாளர் ஜெ.ஜான் கென்னடி மற்றும் பேரவை நண்பர்கள் இணைந்து சிறப்பான முறையில் செய்து கொடுத்துள்ளனர்.
மேலும் ஐ.பி.எல் சதுரங்க கழக வீரர்களுடன் மும்பைக்கு வந்த இயக்குநர் ச.கண்ணன் அவர்களை பேரவை நிர்வாகிகள் சிறப்பான முறையில் வரவேற்றனர்.